எங்கே ஆரம்பிப்பது…

பல பெண்கள் என் வாழ்க்கையில் வந்து போனதில் யாரைப்பற்றி சொல்லுவது… இன்று வரை இணையதளங்களின் ரகசிய பதில்களில்(Secret Password Answer) உலவி கொண்டிருக்கும் அவளை பற்றி சொல்லியே ஆகவேண்டும்…..
அறியாமை என்ற வார்த்தை எவ்வளவு வலிமையானது என்பதே அறியாத வயது…
தெரிந்தது எல்லாம்… படிக்கவேண்டும் அப்பாவுக்காக…  பத்தாம் வகுப்பில் 300யை தாண்டியது மதிப்பெண்… குடும்பமே சந்தோஷத்தில் திளைத்தது….நெருங்கிய சொந்தங்களில் யாருமே தொடாத மதிப்பெண் என்ற சந்தோசம்….
அப்பாவின் என்னை பற்றிய அண்ணா பொறியில் பல்கலைகழக மாணவன் கனவு வலுக்க தொடங்கியது…
ஒரு தோல்வியில் இருந்து வெற்றி பிறக்கும்…. ஆனால் எனக்கோ வெற்றியில் இருந்து தோல்வி ஆரம்பமானது…… இடமாற்றம் …. பெற்றோர்களின் அரவணைப்பில் இல்லாதது….நான் இழந்தது மொத்தமாய், ஐந்து வருடங்களை…. கஷ்டகாலங்கள்…போகட்டும்….
இந்தியாவையே தலை நிமிர்த்திய மென்பொருள் துறை… இளைஞர்களிடம் ஏற்படுத்திய தாக்கம்….மணிரத்தினத்தின் ரோஜா படம் கொடுத்த பிரம்மிப்பு…..என்னையும் கொண்டுபோய் நிறுத்தியது சென்னையின் A.V.M திரை அரங்கின் எதிரே…… Aptech computer education…..Vadapalani…..என்னும் தங்க எழுத்துகள் பளபளத்து கொண்டிருந்தது.
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2


இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…