சிங்கள ராணுவத்திடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிகொண்டிருக்கும் முன்னால் போராளியின் பார்வையிலே…. 

போராடினோம்…போராடினோம்…
தீவிரவாதி என்றார்கள்…
தோல்வியின் விளிம்பினில்…
ஆயுதங்களின் அமைதி என்றோம்….
தலைமையை பற்றி பலவாறு தகவல்…
நாங்களோ அந்நியனின் கைகளிலே…
அவன் எங்களை தமிழனாக பார்த்தான்… மனிதர்களாக அல்ல…
மானத்திற்காக போராடினோம் அன்று..
இன்று தினம் தினம் போராடி கொண்டிருக்கிறோம் உயிருக்காக…
தயவு செய்து யாரும் பேசாதீர்கள் மனிதாபிமானம் பற்றி…
நாங்கள் முன்னால் போராளிகள் தவறு தீவிரவாதிகள்… மனிதர்கள் அல்ல….
அழுவதற்கு கூட அவர்களிடம் அனுமதி வாங்கவேண்டும்…..

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…