உளவுத்துறை : ஐயா… பார்வதி அம்மா… சென்னைல…

கருணாநிதி :  யோவ்வு.. யாருய அது…

உளவுத்துறை : பிரபாகரன்…

கருணாநிதி : என்னது… பிரபாகரனா…

உளவுத்துறை : ஐயா… அதிர்ச்சி அடையாதீங்க… பிரபாகரன் அம்மா தான்…

கருணாநிதி : அதானே பார்த்தேன்… ஒரு வேலை சோறு போச்சுயா  அவனாலே… சும்மா உட்கார்தேன்…உண்ணாவிரதம்ட்டனுங்க… வேற வழியில்லாம போச்சு…

உளவுத்துறை : ஐயா… . சிகிச்சைகாக இந்தியா  வந்துருக்காங்க….

கருணாநிதி : மத்தியில கூட்டாச்சி… மாநிலத்தில் சுயாட்சி… தேர்தல் வர நேரத்துல… இப்ப தான் செம்மொழி அது இதுனு ஒரு மாதிரி மக்கள மயக்கி வச்சிருக்கேன்… இது என்னைய புது பிரச்சனை… இந்திய தானே வந்திருகாங்க… தமிழ்நாட்டுக்கு இல்லல…

உளவுத்துறை : ஐயா… .சென்னை விமான நிலையத்தில…

கருணாநிதி : நிறுத்துயா…  ( மனசுக்குள் “விட்டா  வைகோ சிந்துபாடிவிடுவான்” )….
கண் ஜடை கட்ட ஒரு அல்லக்கை தொலைபேசியை நீட்ட…
யோவ்வு..எனக்கு தான் ஹிந்தி வராதே… அந்த அம்மாவை அப்படியே… அனுப்ப மேடம் கிட்ட வழி இருக்கானு கேள்யா …

அல்லக்கை ஏதோ பேசி  தொலைபேசியை துண்டிக்க…

கருணாநிதி : என்னயா ஏதாவது வழி இருக்கா…

அல்லக்கை : அந்தம்மா… போன ஆட்சியில…

கருணாநிதி : நீ ஒண்ணு சொல்லத… (எதோ புரிந்தது போல்…உளவுத்துறை அதிகாரியை நோக்கி…) உள்ள விடாதயா…

   
உளவுத்துறை : வயசானவங்க.. கொஞ்சம் தங்கவச்சு அனுப்பட்டுமா…

கருணாநிதி :   பேர் என்ன…

உளவுத்துறை : ஐயா… போயிட்டுவரேங்க…

* இப்ப புரியுதா தலைப்பு…..

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்
 வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…