வார்த்தைகளை அள்ளி தெளித்து…
கவிதை ஒன்று வைத்துள்ளான்…
நேசத்தை வீதியெங்கும்
கவிதையாலே … வீசியுள்ளான்…
மாற்றத்தை இன்று அவள்…
விழியோரம் காண்கின்றான்…
அதரங்கள் விரிய இங்கே…
அவள்  ஏதேதோ பேசுகின்றால்….
இமை மூடா நிலையினிலே…
இனிப்பதனை நுகர்கின்றான்…
மடித்திருந்த கவிதை மொட்டு..
தென்றலோடு உறவாட..
கொடுக்கத்தான்… உரமில்லை…
பூத்ததிங்கே…   வலைபூவில்…