பேச மறுத்த காதலி மீது அமிலம் வீசிய வாலிபர் – நேற்றைய செய்தி… தொடரும் செய்தி கூட…
4 Comments
நீண்ட காலமாக பத்திரிகைகளில் வந்து போகும் செய்தி இது… என்ன காரணம்… ஒரு ஆண் ஏன் இப்படி செய்கிறான்…
தான் காதலிப்பதாக சொல்லும் பெண்ணின் முகத்தில் அமிலம் ஊற்ற எப்படி மனசு வரும்…
இதற்கு ஏதேனும் மறுபக்கம் இருக்குமா…
இந்த நூற்றாண்டில் காதல் படும் பாடு இருக்கிறதே… ஒன்றும் சொல்வதற்கு இல்லை…
பாவிகளே… காதலை நீங்கள் காயப்படுத்தி
தயவிட்டு காதலித்தோம் என்று சொல்லாதீர்…
பெண்களின் உள்ளத்தில… தேடவேண்டியதை
வேறு எதிலோ தேடிவிட்டு… கிடைக்காத வன்மத்தில்
அமிலத்தை வீசுகிரீரே…
சிறுதுளி வெந்நீர் பட்டு துடிக்கும் மனித தேகம்…
எதிரிக்கும் செய்ய அஞ்சும் இப் பாதக செயலை
இங்கு எப்படி தான் செய்கிரீரோ…
காதலிக்கும் பெண் ஒருத்தி உன் காதல்… மறுதளித்தால்
காதலிக்கும் பெண் ஒருத்தி உன் காதல்… மறுதளித்தால்
இப்படி தான் செய்வீரோ… பாவிகளே…
இப்படி தான் செய்வீரோ…
காதலை திணிக்காதீர்… காதலியை வருத்தாதீர்…