அவள் சாதரணமாக பேச ஆரம்பித்துவிட்டால் எனக்கு உள்ளுக்குல் ஆனந்தம் ஆர்பரித்துக்கொண்டிருந்தது வெளிய காட்ட முடியவில்லை ஏற்கனவே என் காதலை பற்றி எல்லோரும் அறிந்திருந்ததால் ஒரு புன்சிரிப்போடு கடந்து சென்றார்கள்.  நட்புக்கு அடித்தளம் போட்ட என் நண்பனை மனதார வாழ்த்திக்கொண்டிருந்தேன் பரஸ்பர சந்திப்பாக ஊர்,  முகவரி எல்லாம் மாற்றி கொண்டு வகுப்புக்குள் நுழைந்தோம்.

மனதினில் மிக பெரிய போராட்டம் ஐந்து வருடத்தை வீணாக்கிவிட்டு இங்கு வந்து சேர்ந்துளோம் ஆனால் காதல் அது இதுவென்று மனது கிடந்தது அலை பாய்ந்ததும் என்ன செய்வதென்றே புரியவில்லை…

நட்போடு காதலையும் நான் வளர்த்து கொண்டிருந்தேன் ஆனால் எங்களை பார்ப்பவர்கள் நங்கள் இருவரும் காதலிப்பதாக கருத ஆரம்பித்துவிட்டனர்.

எப்பொழுதும் வகுப்பு முடித்தவுடன் என்னிடம் விடை பெற்றுவிட்டு தான் மற்றவர்களிடம் விடைபெற்று வீடு திரும்புவாள் இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் எந்த அளவிற்கு அவளின்  நேசத்திற்கு உரியவனாகிருப்பேன் என்று அவள் மிகவும் இனியவள் எப்பொழுதுமே சிரித்த முகம்… வித விதமாய் அவள் தேர்ந்தெடுத்து அணியும் உடைகள்… இன்னும் எவ்வளவோ… என்னை இன்பத்திலே புரட்டி போட்ட காலங்கள்…இனிப்பை தடவிய நிமிடங்கள்…அன்று நான் என் நண்பனோடு பேசி கொண்டிருந்தேன் வேக வேகமாய் வந்தவள் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு என்னை கவனிக்காமல் சென்றுவிட்டால் நான் அழுகாத குறை அந்த வரவேற்பு அறை முழுக்க என் வகுப்பு தோழர்களும் தோழிகளும் தீவிரமாக எதை எதையோ பேசி கொண்டிருந்தார்கள். ஆனால் அனைவரின் பார்வையும் என்னுடிய முகஅசைவுகளில் தான்… ஒரு கணம் மனம் வெற்றிடமாக தெரிந்தது… எதையும் சிந்திக்கும் மனநிலை இல்லை.

தொடரும்…