முத்தம் – மொழி பெயர்ப்பு தேவையில்லை…
4 Comments
குவிந்த அதரங்கள் மட்டுமே பேசும் வார்த்தைகள்
புரிந்தவர்களுக்கு மட்டுமே விளக்கங்கள்
கூட நடந்தால் இமயம் இளகியது… என்ன ஒரு வெப்பம்…
நேற்று கேட்டோமே … கதைகளை பேசும் விழியருகே.. வானொலியில்
ஆமாம் கண்கள் பேச ஆரம்பித்துவிட்டன…
காதினை கூர் படுத்தினேன்… மெல்லிய ஓர் சத்தம்…
என்ன இது விழி பேசவில்லையே… ஓ.. அதரங்கள் பேச ஆரம்பித்துவிட்டன.
தாங்கமுடியாத தவிப்பு… நெருங்கி நிதானமிலந்தேன்…
உயிர் உதறல் எடுத்தது… தள்ளினேன் அவளை…
எங்கும் வெளிச்சம்… மணி ஆறு…