காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 4

வெறுமையான பார்வையில் என் நண்பனின் எதோ ஒரு உரையாடளுக்கு தலை அசைத்துக்கொண்டிருந்தேன் அவனுக்கும் தெரியும் என் மனம் அங்கு இல்லை என்று…     . “டக் டக்”  என்கின்ற மிக பலமான காலணி சத்தம் எல்லோரும் வாயிற்படியை நோக்க வைத்தது மூச்சிறைத்து நின்றால் அவள்… ஒன்றுக்கும் சற்று குறைவான நொடி தான்…
“பாய்(bye) சிவா” என்றவள் மின்னலாக மறைந்துவிட்டால்.. சிவா என் பெயர் அல்லவா … ஏன்  திரும்ப வந்தால் இந்த சிறு விடயத்தை கூட என்னால் தாங்க முடியாது என்று நினைத்திருப்பாலோ.. மனது நெகிழ்ந்தது…வெறுமையில்  இழந்த நொடிகள் மின்னலாய் அவள் தோன்றிய நொடிகளில் சமன் செய்யப்பட்டது.  அவளுக்குள் காதல் இருந்ததோ இல்லையோ…  யாரும்  எதிர்பாராத இந்த நிகழ்வினால் எல்லோரும்  ஒரு முடிவிற்கு வந்துவிட்டார்கள். அங்கு காதல் உறுதி செய்யப்பட்டது வாழ்த்துக்களிலும் பார்வைகளிலும்.
அன்று சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லை புதிய ஒலிநாடவை உரக்க வைத்து கேட்டே ஆகா வேண்டும் என்கின்ற வெறி… இந்த நேரம் பார்த்து மின்சாரம் இல்லை…சரி அப்படி இப்படி என்று அரைமணி நேரம் கழித்து மின்சாரம் வந்தது “மிஸ்டர் ரோமியோ” A.R. ரகுமான் இசையில் முழு சத்தத்துடன் வைப்பதற்காக எல்லா கதவு சன்னல்களையும் மூடிவிட்டு ஆரம்பிக்க பொத்தானை அழுத்தும் போது கதவை யாரோ தட்டும் சத்தம்… வெறுத்துபோய் கதவை திறந்தால் சொந்த ஊரிலிருந்து அப்பாவை பார்க்க சிலர் வந்துள்ளனர் வெறுப்பு மனதில் மட்டும் பாவம் அவர்களுக்கு என்ன வேலையோ…முடிந்த வரை சத்தத்தை குறைத்து கேட்க ஆரம்பிதேன்… ஒரு பெரிய பிரச்சனை A.R. ரகுமான் இசையில் முதல் முறை கேட்கும் பொழுது சுத்தமாய் பிடிக்காது… அதற்கு விதிவிலக்கு ரோஜா படம் மட்டுமே… நேற்று கேட்ட
விண்ணை தண்டி வருவாயா…வரை அப்படி தான்.. முதலில் கேட்கும் பொழுது அதிகபட்ச எதிர்பார்ப்பால் மனம் லயிக்காது…
“மெல்லிசையே”     பாடலும் அப்படித்தான் முதலில் பிடிக்கவில்லை… ஆனால் எங்கோ இருந்த என்னவளை என்னருகில் கிடத்திய பாடல்… “எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன்… உயிர் சுமந்து தவித்திருந்தேன்…” காலங்கள் என் காதலை எங்கோ தூக்கி அடித்துவிட்டன… ஆனால் அந்த சுகமான நிமிடங்கள்…
தொடரும்…