அப்படி இப்படினு ஒரு வழியா பத்து நாள் நடந்து பழனி வந்து சேர்த்தோம் மலை ஏற எல்லாம் தயாரா இருந்தாங்க… எனக்கா குதி காலில் தாங்க முடியாத வலி என்ன என்ன தவறு செய்தேனோ எல்லாம் கண்ணு முன்னாடி வந்துவிட்டு போச்சு… ஐயோ.. மலை ஏறலன பெரிய அசிங்கமா போய்டுமேனு ரொம்ப பீல் பண்ணி முருகன் கிட்ட வேண்டிகிட்டேன். ஒரு பத்து நிமிஷம் போச்சு கொஞ்சம் கொஞ்சம்மா வலி கொறைஞ்சது இதுல பெரிய விஷயம் என்னனா முருகன் உடனே மன்னுச்சுட்டாரு பாருங்க…என்ன தான் இருந்தாலும் நான் சின்ன பையன் தானே…
அந்த பயணத்த மனசுல வச்சுகிட்டு இப்ப போயிட்டு வரலாம்னு மாலைய போட்டாச்சு…ஏற்கனவே பல தவறுகள் செஞ்சு மலை ஏற முடியாம முருகன்கிட்ட புலம்புனது ஞாபகம் இருந்ததனால ரொம்ப ரொம்ப கவனமா விரதம் இருந்தேன். அந்த நாள் வந்துச்சு… திண்டுக்கல்ல இருந்து நடக்கிறதா முடிவு பண்ணி… நான் என் தம்பிக ரெண்டு பேரு அப்பறம் எங்க அப்பா அம்மா…எல்லாம் கிளம்பி திண்டுக்கல் வந்தாச்சு…
அனைவரும் அங்க இருந்த விநாயகர் கோயில்ல சாமிகும்பிட்டு எங்க பாதயாத்திரையை தொடங்கி ஐந்து நிமிசம் கூட ஆகல ஒரே வலி கால்ல… என்ன பிரச்சனைனா அப்பதான் புதுசா ரோடு போட்டுருகாங்க… அது மெயின் ரோடு வேற… ஓரம்மாத்தான் நடக்க முடியும்…அங்கபாத்து ரோடுக்கு போடுற சிமிண்டு ஜல்லி…சும்மா சொல்லகூடாது…ஊசிய ரோடு புல்லா நட்டுவச்ச மாதிரி ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியல… எங்க அம்மாவும் சின்ன தம்பியும் வேக வேகம முன்னாடி போக…மீதி மூனு பேரும்…கொஞ்சம் கொஞ்சம்மா பின்னாடி போய்கிட்டிருந்தும் அவங்க வேகத்துக்கு… நான் ஒரு மைல் கல்லையும் விடவில்லை…எல்லா மைல்க்கல்லிலையும் உட்கார்ந்து ஓய்வு எடுத்து சாதனை செய்தேன்…
தொடருங்க…