எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ஈழ தமிழர் பற்றி… பொதுவா தமிழர்களிடம் ஒற்றுமையை எதிர்பார்ப்பது மிக பெரிய முட்டாள்தனம் ஆனால் ஈழ தமிழர்களின் ராணுவ வளர்ச்சி, என் எண்ணம் தவறு என்ற முடிவுக்கு வந்தேன். கடந்த வருட புலிகளின் தோல்வி மனதை ரொம்ப பதித்தது கொஞ்சம் நேரத்தை செலவழித்து இலங்கை பற்றி ரொம்ப படித்தேன்.எனக்கு தெரிந்த வரை அவர்களின் தோல்விக்கு ஒற்றுமை என்ற ஒன்றை உலக அளவில் தமிழர்கள் மறந்துவிட்டதே காரணம், பல கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தின் தென்பகுதி உரக்க கத்தினால் கேட்டாலும் கேட்டுவிடும் அவ்வளவு தூரம் தான் ஆனால் போர் சமயத்தில் கதறி அழுதும் அசரவில்லை நம் தமிழக மக்கள்… அதை விட கொடுமை கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து அவர்களை ஏமாற்ற நினைத்தது…
புலிகளை தீவிரவாதி என்று முத்திரை குத்தி ஒழித்துவிட்டனர்… புரட்சிக்கு கொடி பிடித்த காலம் போய் புரட்சி என்றலே தீவிரவாதம் என்கின்ற நிலை இப்போது… அமெரிக்காவின் 9/11க்கு பின்பான உலக மாற்றத்தில் இனி அடிமையாய் மட்டுமே வாழ பழகி கொள்ள வேண்டும் போல… 
எனது அலுவலக தோழர் ஒருவர் சமீபத்தில் அமெரிக்கா  சென்றார்… வெள்ளை மாளிகையின் அருகில் கலாச்சார விழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்ததாம் ஓவ்வொரு இன மக்களுக்கும் தனி தனியே இடம் ஒதுக்கி உள்ளனர். இவருக்கோ நல்ல பசி அந்த சமயம் பார்த்து பஞ்சாப் இன மக்களின் இடம் வர இவரும் போய் கைக்குலுக்கி அன்பை பரிமாறியுள்ளார் இந்தியர் என்ற முறையில் அவர்களும் வரவேற்று உணவை உண்ண கொடுத்துள்ளனர் நண்பருக்கோ நல்ல பசி வேகவேகமாய் அருந்தி கொண்டிருக்கும் போது ஒருவர் மேடையில் அறிவித்துக்கொண்டிருக்கிறார் இப்படி “இந்தியாவால் ஆக்கிரமிக்கபட்ட காலிஸ்தான் தேச உணவு இங்கே பரிமாறப்பட்டுக் கொண்டிருகிறது”  என்றாராம் நண்பருக்கு வந்ததே கோபம் கொடுத்த உணவை பசி இருந்தும் திரும்ப கொடுத்துவிட்டு நடையை கட்டியுள்ளார்.  அந்த நண்பர் ஓரு  தமிழரும் கூட, மற்றந்தாய் மனபான்மையில் வடஇந்தியர் நம்மை நடத்தினாலும் நாம் என்னமோ என்றும் இந்தியர் என்ற எண்ணத்தை மாற்றியதில்லை. ஆனால் முதலில் நான் ஒரு மனிதன், அடுத்து ஒரு ஆண், அடுத்து ஒரு தமிழன், ஒன்றுபட்ட தேசத்தில் வசிப்பதால் நான் ஒரு இந்தியன்… இப்படி இருக்க நிலத்தால் வேறுபட்டு மொழியால் ஒன்று பட்டவன் மீது அதுவும் அடிமைககளாய் அடக்க பட்டுகொண்டிருப்பவனை கண்டு இரக்கப்பட்டால் தவறு என்று கச்சை கட்டும் காங்கிரஸ் மற்றும் பல தமிழ் இன துரோகிகளை என்ன செய்யலாம்…
  
அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தே உலக நாடுகளை அடக்கி கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இப்போது வேறுபாடு ஒன்றும் இல்லை. தன் மக்கள் தொகையில் 6 கோடிக்கும் மேல் இருக்கும் ஜனத்திரளின் கோபத்தை துச்சமாக நினைத்து சர்வதேச சபையில் (U.N) எதிரி நாடுகளுடன் சேர்ந்து இலங்கைக்கு ஓட்டளித்தது எந்த வகை நியாயம்…
ராஜபக்சேயின் போர்குற்றதை பற்றி நான் பேச போவது கிடையாது…அவனை மட்டும் தூக்கில் போட்டாள் அந்த பாவம் கரையாது… அதற்கு பல பங்குதாரர்கள்…இந்திய உட்பட… அதை பற்றி பேசினால் நமக்கு நாமே சேர் அள்ளி பூசுவதற்கு சமம்…ஆனால் நிச்சயம் நமக்கு தண்டனை உண்டு…அதுவும் இந்திய தமிழராய் இருந்தால் ஒருக்காலும்  நான் அப்பாவி என்று தப்பிக்க முடியாது…