நித்தம்

ஒரு இடுகை
நித்திரை கெடும்
சில நாள்…

பலர் படிப்பார்
பலர் ரசிப்பார்…
வோட்டுக்களை
பார்த்தால் 
பலர்
சிரிப்பார்…

நல்லதொரு பயணம்…
அங்கங்கே
பொறுமை கொஞ்சம் 
சோதிக்கும்…
நிலைத்துவிட்டால்
தமிழ் எழுத்துன்னை
நேசிக்கும்..

தமிழ்
பெண்மை தன்மை 
வாய்ந்ததாம்
கர்டுவேல் மதிப்பிட்டார்…
இன்பத்தை மட்டும் 
ஊட்டும்…
வீரியத்தை அல்ல
என்றார்…
புறநானூறு 
படித்தாரோ என்ற 
ஐயம் எனக்கு…

நண்பர்களே… 
எனக்கு 
பொறுமை அதிகம்
உங்கள் 
வரவுக்கு 
என் வந்தனங்கள்…
சராசரி மனிதனாய்… 
இன.. மான…தமிழனாய்…