என்ன தான் கும்பல்ல வாங்கினாலும்…நாம எழுதியதையும் கவிதைன்னு மதிச்சதுக்காக…மனசுல ஒரு சின்ன சந்தோசங்க…

இந்த படதிற்கு நான் எழுதிய இரு கவிதைகள்…

முதல் கவிதை

பட்டம் அறுந்து
போனாலும்
அது காதல் பட்டம்
பால் நில ஒளியில்
அது
சுமந்து செல்கிறது…
உன்னோடு நான் இருந்த
கடைசி சில
நிமிடங்களை… 

இரண்டாவது கவிதை

கண்ணே!
இங்கே பார்…
நிலவுக்கு ஆதரவாய்
செஞ்சுடர்…

தலை சாய்த்து
கொஞ்சி நிற்கும்
மர நிழல்கள்…
அதற்கு ஆதரவாய்
மலை முகடு…

என்
நினைவலைகள்
வானில்
மேக மூட்டமாய்…

நீ
மட்டும்
இங்கு இல்லை
உன்
சுவடுகள்
எங்கும் எதிலும்…