12 C மயிலை பேருந்து…
6 Comments
நீ
வருவாய் என
தெரியும்…
நின்றேன்
உன்
பார்வை
படும் படி…
அது
ஒரு மழைக்காலம்
கையில்
கவிதைகள்…
என்னோடு
மழையில்
அவைகளும் நனைந்தன…
12 C மயிலை
பேருந்து…
சன்னலோரம்
நீ…
படிக்கட்டு பயணம்…
ஆதரவு தந்தாய்
என்
கவிதைகளுக்கு …
உனக்கு
தெரியாது…
அது
அத்தனையும்
உனக்காக
எழுதியவை என்று…
ஒரு நாள்
அத்தனை
கவிதைகளும்
சாலையோரம்…
நீ
மட்டும்
அதே
பேருந்தில்…
உன்னால்
மறுக்கபட்டது….
எனது கவிதைகள் கூட…