நீண்ட 

இடைவெளி 
இந்த 
சந்திப்பு 
நமக்குத்தான்…
உன்னை 
வெறுக்கிறேன்…
ஏன்
உன்னை 
பார்த்தேன்… 
அந்த
சிரித்த முகம்….அய்யோ
என்னை
காப்பாற்றுங்களேன்…
எங்கே 
போனது 
உன் 
கோபம்…
பரிதாப பார்வை 
பார்த்தாய்…
இந்த
முறை 
மயங்கமாட்டேன்…
உதட்டை
சுழித்து,
முலாம் பூசிய 
சிரிப்புடன்
விடை பெற்றாய்… 
வெகு நேரம் 
பார்த்தேன்…
உன் 
சோர்ந்த நடையினை…
ஆனாலும் 
இந்த
முறை 
மயங்கமாட்டேன்…
தூரத்தில் 
போகும் போது 
கண்களை 
துடைத்தாயே
அழுதாயா … 
ஆனாலும் 
இந்த
முறை 
மயங்கமாட்டேன்…
குலுங்கி
அழுகின்றேன்
தேற்ற ஆளில்லை…
நான் 
செய்த 
தவறுக்கு
நீ… 
ஏன்
மன்னிப்பு 
கேட்கின்றாய்…
நான் 
செய்த 
தவறுக்கு
நீ…
ஏன்
துன்ப
சிலுவைதனை 
சுமக்கின்றாய்…
ஆனாலும் 
இந்த
முறை 
மயங்கமாட்டேன்…
நீ… 
என்
காதல் சுமை 
தூக்க…
நம் 
பிரிவு 
உனக்கு 
சிறுகாயம்…
என் 
காதல் 
உன்கென்றும்  
பெரும் காயம்…
என்னை மன்னிக்காதே!!!
ஆனால்
கண்டிப்பாய் 
மறந்துவிடு…