வெற்றுத் தாளில்
வெள்ளை எழுத்துக்கள்
நான்
எழுத தொடங்கும் வரை…
ஒரு
எழுத்து தவறாமல்
அப்படியே
வந்ததிங்கே…
மையின் நிறம் மட்டும்
என் பங்கு…
மற்றவை புரியவில்லை…
மிச்சமின்றி இறக்கியவுடன்
நினைவு வெற்றிடத்தில்
இறந்த கால
நிகழ் கால
எச்சங்கள்…
உடனடியாய்
நிரம்பிக்கொள்ளும்…
மீண்டும் மீண்டும்
எழுதுகிறேன்…
வெள்ளை எழுத்துகள்
என்
பேனா மைப்பட்டு
நிறம் மாறும்…
நினைவு ரேகைகளின்
நகலாய்
வெள்ளை தாளில்…
வெள்ளை எழுத்துகளில்…
நிச்சயம்…
என் பங்கு
எதுவும் இல்லை…
என் பெயரை போடாதீர்…