மே 18 ஒரு இந்திய பாவம்!
0 Comments
படுகொலையை
நிகழ்த்திவிட்டான்
பௌத்தம் பேசும்
படுபாதகன்!
தமிழ், தமிழ் என்றான்
திராவிட முகம்
சுருங்க!
பூகோள அரசியலாம்
புதிர் போட்டான்
காவி மைந்தன்!
முப்பது மைலே
தூரம்,
பல லட்சம்
உயிர் பொசுங்க!
தமிழா,
தமிழீழம்
நீ மறந்தாய்!
தடுக்காத இனச்சாவு
நித்தம் ஒரு போராட்டமாய்
பாவத்தின் வடிவிலே
தமிழ்நாட்டை சுற்றுதிங்கே!!!