நாம் தமிழர், நாம் தமிழர்
என்று
பறை அடித்தும்
விழிக்காத தமிழனை
இன்னும் எத்தனை உயிர்களை
கொடுத்து எழுப்புவது!

வெந்தணலில் வரிசையாக
முத்துக்குமார்,
தங்கை செங்கொடி ,
காவிரி மகன் விக்னேஷ்
பரோலில் வந்த
பேரறிவாளன் விக்கித்திருப்பான்!
அனிதாவின் அகால
மரணம் கண்டு!

வீரத்தமிழர்கள்
எங்கள்
கையறு நிலையால்
ஈழம் பட்ட பாட்டை
எங்கே போய்
முறையிடுவது,
அதை
தமிழ் நாட்டில்
தடுக்க
இன்னும் எத்தனை உயிர்கள்!

நெடுந்தூரம் துரத்தி
வரும்
பார்ப்பனிய அரக்கனும்
திராவிட அயோக்கியனும்
இன்று ஊரறிய
ஒன்று சேர்ந்து
தமிழனை
நக்கி பிழை என்கிறான்!

கால சூழலில்
இன்று
தமிழன் அநாதை!
ஆமாம்
ஏழு கோடி அனாதை!
ஒரு லட்சம்
விழித்து கொண்டோம்!
இனி
விழித்து கொண்டே
உறங்குபவனை,
வெறியேற்ற
வேலை செய்வோம்!
இனி
தமிழன் உயிர்
அரசியல் வியாதிகளின்
விற்பனைக்கல்ல!!!

சாதி மதமாய் பிரிந்த
தமிழன்
இன்று ஓவியா,அஜித்,விஜய்
என்று கூறு போடுவதை
உடைக்க வேண்டும்!
தமிழா!
கூத்தாடிகளை ரசி
ஆனால்
அவனை தலைவனாக்கி
தலை வணங்காதே!

வீர வணக்கம் முத்துக்குமார்,செங்கொடி,விக்னேஷ்,அனிதா.
தமிழா முற்றுப்புள்ளி வைக்க உதவு!!!

Tags: