நேற்று கேட்ட
நறுமுகையே!
நகர்ந்த பொழுதுகளையும்
கரைந்த காலங்களையும்
நினைவூட்டின
மணியின் இருவர்களில்
கழிந்த
என் நிமிடங்கள்
வரலாறாகிவிட்டது!

வானில் பார்த்த
மட்டைப்பந்து
குச்சிகளாய்(ஸ்டம்ப்ஸ்)
அந்த நட்சத்திரங்கள்
எங்கும்
நகராமல்
இன்றும்
என்னையே
பார்த்து கொண்டிருகின்றன!

மின்னஞ்சல்
பார்ப்பதே
அணிச்சை செயலானது!
இயங்கு தசையில்
என் கண்களும்
இனி அடக்கம்!

மனம் தேம்பி தேம்பி
அழுகிறது
ஆனால்
ஏனோ
கண்ணீர் மட்டும்
அனுபவத்தால்
நீர் தர
மறுக்கிறது!

எனக்கு
வயதாகி விட்டதா
இல்லையே
மனதுக்குள்
அந்த கல்லூரி வாலிபன்
அல்லவா
வலம் வந்து
கொண்டிருக்கிறான்!

நேற்று பிறந்த
திங்கள்,
வெள்ளியாய்
மாறி
மீண்டும் திங்களாய்!
ஏன்
இந்த அவசரம்
எனதருமை
நாட்காட்டியே!

விலாசம் கொடுங்கள்
நகர்ந்த பொழுதுகளையும்
கரைந்த காலங்களையும்
மீண்டும்
ஒரு முறையேனும்
மீட்டெடுக்க!!!

Tags: