ஒட்டுமொத்த உலக மக்களையும் மிக எளிதாக முட்டாளாக்கி, அவர்களின் பயத்தை மிகத் தெளிவாக அறுவடைச் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. எதை மடைமாற்ற இந்தக் கிருமித் தொற்றை வரலாற்றிலே இல்லாத அளவிற்கு ஊரடங்குகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். மக்களைச் சட்டங்களால் கட்டுப்படுத்துவது ஒரு விதம், மக்களுக்கே தெரியாமல் அவர்களையே அரசாங்கங்கள் விரும்பியதைச் செய்யவைப்பது ஒரு விதம், இதில் எந்த விதம் இப்போது நடைமுறையில் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

அறிவாளர்களிடம் இருந்த அறிவியல் எப்போது வியாபாரத்தில் நுழைந்ததோ அப்போதே மனிதத்திற்குப் பெரும் தீங்கு இழைக்கப்பட்டுவிட்டது. இனி நாம் எளிதாக இதிலிருந்து மீள முடியாது, உலக மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வுக் கொண்டுவருவது என்பது எளிதானக் காரியம் இல்லை. செய்திகள் குவியல் குவியலாகக் குவிக்கப்பட்டுக் கொண்டப்பட்டிருக்கும் இந்த நூற்றாண்டில் எதை நம்புவது எதை மறுப்பது என்பதில் ஆரம்பிக்கிறது விழுப்புணர்வு என்பது, தற்பொழுது அதில் மக்களின் உயிர் பயமும் கலந்துவிட்டதால் நடக்கின்ற நிகழ்வு மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு நடக்கிறது என்பது உறுதி!

கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்! தீர விசாரிப்பதே மெய்!