கொஞ்சம் வெட்கமாய்த் தான் இருக்கிறது சுப.வீயைப் பற்றி எழுதுவதற்குத் திராவிடக் கைத்தடி இப்பொழுதுத் தமிழர்களை அடிக்க ஆரம்பித்துள்ளது, இதை நல்லதாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். தமிழர் என்கின்ற போர்வையில் திராவிடம் நடத்திய நாடகங்கள் ஒவ்வொன்றாகத் திரைக் கிழிந்து தொங்குகிறது.

இந்திய தேசிய ஊடகங்கள் இவர்களைப் பார்த்தவிதம் கண்டு பலமுறை நாம் குமுறி இருப்போம், விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் என்று வைகோவையும் இன்னப் பிற திராவிடக் கைத்தடிகளையும்
தமிழர்ச் சார்பாகப் பேசுவது போல் காட்டும் போது ஏமாந்தப் பல கோடித் தமிழர்கள் உண்டு.

1990 களில் திராவிடம் கசந்தச் சுப.வீக்கு இப்பொழுதுத் திராவிடம் இனிப்பாய் இருக்கிறது. தமிழ்த்தேசியம் பேசிய வாய் இப்பொழுது “பசிக்கும்ல” என்று டிக்டாக்( TikTok ) விழியத்தில் கேட்கும் அப்பாவிச் சிறுவன் போல் கேட்கிறாரா என்ன…

திராவிடத்தைச் செதில் செதிலாக உதிர வைத்தாகிவிட்டது, திராவிடக் கோட்டைகளைத் தமிழன் செங்கல் செங்கலாய்ப் பேர்த்தெடுத்துக்குக் கொண்டிருக்கிறான். தமிழராய்ப் பிறந்துவிட்டீர்கள், பெரியவராய் இருக்கிறீர்கள், வீழ்ந்தத் தமிழினம் எழுந்தக் கொண்டிருக்கிறது வீணாய் இலவசச் சாப்பாட்டுக்கு அவமானப் படாதீர்கள். நீங்கள் அஞ்சிய கருணாநிதி இப்போது இல்லை தெளிவு பெறுங்கள்.

இந்த வார்த்தைகளை நீங்கள் தான் உதிர்த்தீர்கள், என்ன ஓர் ஆவேசம் திராவிடம் மீது, இப்பொழுது எங்கே போயிற்று அந்த வேகம் ?

சுப.வீ பேசியதாவது:-

“1963 -ல் பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் பிரிவினை என்றே சொல்லவே கூடாது என்று பேச்சுரிமை பறிக்கப்பட்டது.

அந்தச் சட்டம் வந்தவுடனேயே அண்ணா திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணங்கள் சாதூர்யமான பேச்சுதான்.
பிறகு 1965 -ல் மாணவர்கள் நடத்திய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஏற்படுத்திய எழுச்சி 67 -ல் முடிந்துவிட்டது. அதற்குக் காரணம் (தி.மு.க) ஆட்சிக்குப் போனதுதான்.

திருச்சி (தி.மு.க)மாநாடு ஒரு திருப்புமுனை என்றார்கள். ஆனால் ஒரு மாற்றமும் இல்லை. குடியரசு, விடுதலை, குத்தீட்டி, எரியீட்டி என்று ஒரு காலத்தில் (திராவிட) பத்திரிக்கைகள் வந்தன. ஆனால் இன்று திராவிட இயத்திலிருந்து குங்குமம், முத்தாரம், மெட்டி என்று வருகின்றன.

குங்குமம் பத்திரிக்கையிலே ஆபாச இலவச கிளுகிளுப்பு இணைப்பு வெளியிட்டு அதை எதிர்த்து ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.
ஏ.பி.வி.பி யும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒவ்வொரு கல்லூரியிலும் பள்ளியிலும் வேலை செய்கிறார்கள். நாம் இலவச கிளுகிளுப்பு வெளியிட்டுக்கொண்டு இருக்கிறோம்.
திராவிட இயக்கம் எந்தத் தேய்வுக்கு வந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இரண்டு திராவிட இயக்கங்களும் மாறி மாறி டெல்லிக்கு காவடி எடுத்ததால் இங்குத் தமிழ் தேசிய உணர்வு பட்டுப் போயிருக்கிறது”
[துக்ளக் 16.02.1990]

திராவிடச் சிந்தனையுடன் வார்த்தெடுக்கப்பட்ட சுப.வீ, 1970களில் பெருஞ்சித்திரனார் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டுத் தமிழ்தேசியத்திற்கு மாறினார். ‘தமிழர் இயக்கம்’ எனும் அமைப்பையும் தொடங்கினார். பிறகு தோழர் தியாகுவின் தமிழ்தேசிய இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். ஈழ ஆதரவுப் பணிகளில் ஈடுபட்டபோது 2002 இல் ஜெயலலிதாவினால் பொடா சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டார். இந்த நிலையில் இவருக்குக் கருணாநிதி உதவி செய்ய ஆரம்பித்தார். 30 ஆண்டுகள் திராவிடத்தை விமர்சித்து வந்த சுப.வீ கருணாநிதியால் தி.மு.கவிற்கு விலைக்கு வாங்கப்பட்டுத் திராவிடத்திற்கு மாற்றப்பட்டார்.

ஒரு தமிழனாய் தமிழ்த்தேசியத்தில் சமரசம் இன்றிச் சாதிக்கமுடியாமல் ஊரை ஏமாற்றம் திராவிடத்தைத் தமிழர்கள் திணிப்பது உங்களுக்கு நீங்களே தோண்டிக் கொள்ளும்… சொல்லத் தமிழர் அறம் இடம் கொடுக்கவில்லை.

Tags: