எடப்பாடி துதிபாடிகளின் கவனத்திற்கு!

சமூக ஊடகங்களில் தற்பொழுது நடக்கும் பெரிய அக்கப்போர் என்னவென்றால் அரசியல் புரிதல் இல்லாத சில தமிழர்களைச் சொல்லலாம், இவர்கள் எடப்பாடியை நம்பும் அளவிற்கு எடப்பாடி என்ன செய்து கிழித்துவிட்டார் என்று நிச்சயம் புரியவில்லை.
ஊர் பெயரை அப்படியே ஆங்கிலத்தில் எழுத சொல்வது எல்லாம் ஒரு சாதனையா, தமிழ்நாடு முழுக்கப் பெயர்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று ஓர் ஆணை போட்டிருந்தாலாவது நாமும் வாழ்த்திவிட்டுப் போகலாம்.
நான் நினைக்கிறேன் இவர்கள் எல்லாம் எதாவது ஒரு சிறு காரணம் கிடைக்காதா முதலமைச்சர் எடப்பாடியை உயர்த்தி இந்துத்துவாவிற்குப் பலம் சேர்த்துவிடமாட்டோமா என்று துணிந்து இறங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
இன்னொரு கூட்டம் எடப்பாடி தனது தமிழ்க்குடி என்றும் அதனால் அவர் செய்வது பெரிய சாதனை என்றும் கிளம்பிவிட்டது. இந்த அரசியல் புரிதலின்மையைச் சரியாகத் திமுகவும், இந்துத்துவாவும் அறுவடை செய்து கொண்டிருக்கின்றன.
சமூக ஊடகங்களில் இவர்கள் செய்யும் எடப்பாடி அலப்பறைகள் உண்மையான தமிழுணர்வாளர்களைக் கேலி செய்வதாக அமைகிறது, ஏற்கனவே அரசியல் புரிதல் இல்லாத மக்களிடம் எடப்பாடி தங்களைக் காப்பாற்றுவார் என்று புகுத்த நினைப்பது வேடிக்கை தான்!
எடப்பாடி,பன்னீர்செல்வம் இவர்களை எல்லாம் தமிழின உணர்வாளர்களாகக் கருதுவது அல்லது அது போன்ற பிரச்சாரங்களை மேற்கொள்ளுவது நகைப்புக்குரிய விடயமாகும்.
ஒன்று வேண்டுமானால் செய்யலாம் சீமான்,அன்புமணி,எடப்பாடி,பன்னீர்செல்வம்,தினகரன்,வேல்முருகன் என்று தமிழர்கள் ஒன்று சேரலாம் அதுவோ தமிழினத்திற்கு விடிவு காலம் இல்லையெனில் இந்துத்துவாவிற்கும் திராவிடத்திற்கும் காவடி தூக்கியே நாம் அழிந்து போவோம்!