திரிகின்றார் அவர் குறளாலே…
ஐயா…பிச்சை போடுங்க சாமி…என் நண்பன் பார்த்தான் கீழிருந்து மேலாக..மறுத்தான்ஈயென இறத்தல்…நான்முடிக்கவில்லைதமிழ் அறிந்தவன்…பணம் கிடைத்தது அந்தமுதியவருக்குசாலையோரத்தில் மகிளுந்தை விட்டுஇறங்கினான்…வாகன நிறுத்துமிட சீட்டை நீட்டினான்ஒரு சிறுவன்…நண்பனின் வாயில்அனல் தெறிக்கும் வார்த்தைகள் இனிய உளவாக…முடிக்கவில்லைநான் அம்பை திட்டுவதில் பயனென்னகோபத்தை விலக்கிக்கொண்டான் 2010த்திலும்வள்ளுவர் தெரு முழுதும்திரிகின்றார்… அவர் குறளாலே…குருஎன்பார்.. இங்கு அறத்தைவிற்பார்…அவர் நாணவள்ளுவம் வழி நிற்போம்…மனிதனாய்…உயர்ந்த மனிதனாய்…