இளவெயினியின் அழகிய முகம்
மார்கழி பனிக்காற்று கிழக்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய அந்த சிறு பாதையின் இரு மருங்கிலும் இருந்த மரங்களை உரசி சூடேற்றிக்கொண்டிருந்தது. தமிழ்ச்செல்வன் புரவியை தட்டி கொடுத்தான் மனதில் எதிர் கொள்ளப்போகும் அபாயத்தை பற்றி கணக்கிட்டுக்கொண்டிருந்தான் இடை இடையே இளவரசி இளையமித்ராவின் அழகிய முகம் குறுகிட்டது அவன் முக தசைகளின் அசைவுகளில் இது எளிதாய் துலங்கிற்று. பூப்பாறை அருவியில் அவளோடு புனலாடியது அதை ஒட்டிய ஆல மர நிழலில் ஒட்டி உறவாடியது அவன் மனதை என்னவோ செய்தது இந்த சிந்தனைகள். “செல்வா… இன்னைகாவது சீக்கிரம் எழுந்திரிடா ” தமிழ்செல்வனின் அம்மா அம்மாவின் தொந்தரவு தாங்கமால் தூக்கத்தை தூர வீசியவாரே எழுந்தான்… சரியாக அந்த நேரம் பார்த்து