நாம் தமிழர், நாம் தமிழர்
என்று
பறை அடித்தும்
விழிக்காத தமிழனை
இன்னும் எத்தனை உயிர்களை
கொடுத்து எழுப்புவது!
நெகிழ்வோடு நகர்ந்த தருணங்கள் காந்த புலன்களாக நுழைவரியா காதல்கள்! வசந்தங்கள் வீசிப் போகும் மாலை நேரப் பொழுதுகள்! தமிழ்ப்பசி போக்கிய கடல்புறா நாவல்கள்! பூவாய் மலர்ந்த தமிழ்ப்பிள்ளைகள்! இதுவும் ஒரு வெற்றி தான்… நெடுவாசல்,கதிராமங்கலம், நீட்டை தாண்டி! தமிழா! நீ பூவாய் மலர்ந்தாய்…
படுகொலையை நிகழ்த்திவிட்டான் பௌத்தம் பேசும் படுபாதகன்! தமிழ், தமிழ் என்றான் திராவிட முகம் சுருங்க! பூகோள அரசியலாம் புதிர் போட்டான் காவி மைந்தன்! முப்பது மைலே தூரம், பல லட்சம் உயிர் பொசுங்க! தமிழா, தமிழீழம் நீ மறந்தாய்! தடுக்காத இனச்சாவு நித்தம் ஒரு போராட்டமாய் பாவத்தின் வடிவிலே தமிழ்நாட்டை சுற்றுதிங்கே!!!
நிழல்களை பார்த்துநிசமென்றிருந்தேன்…கதிரவன்மறைந்ததும்நிழல் ஏது…நிசம் ஏது… திரும்பவும்நிழல்…கடன் கொடுத்தான்கதிரவன்…நிழல்கொடுத்தாள் நிலவு மகள்…எது நிசம்..இங்கே!கதிரவனும் எய்கின்றான்..சொல்லவேண்டாம் நிலவை பற்றி…
வெற்றுத் தாளில் வெள்ளை எழுத்துக்கள் நான் எழுத தொடங்கும் வரை… ஒரு எழுத்து தவறாமல் அப்படியே வந்ததிங்கே… மையின் நிறம் மட்டும் என் பங்கு… மற்றவை புரியவில்லை… மிச்சமின்றி இறக்கியவுடன் நினைவு வெற்றிடத்தில் இறந்த கால நிகழ் கால எச்சங்கள்… உடனடியாய் நிரம்பிக்கொள்ளும்… மீண்டும் மீண்டும் எழுதுகிறேன்… வெள்ளை எழுத்துகள் என் பேனா மைப்பட்டு நிறம் மாறும்… நினைவு ரேகைகளின் நகலாய் வெள்ளை தாளில்… வெள்ளை எழுத்துகளில்… நிச்சயம்… என் பங்கு எதுவும் இல்லை… என் பெயரை போடாதீர்…
வயலோர வரப்புகள்,அது அழகாய்மனிதர்கள் செதுக்கிய ஓவியம்… அதோ அந்த மலை முகடு, அதை ஒட்டிய மாலை நேர சூரியன்… சிறு சாரலாய் சன்னல் நனைக்கும் கோடை மழை… யாருக்கும் அடங்காத, ஆதி அந்தம் தெரியா இருப்புப்பாதை… பனம் பழம் விற்ற பாதையோர சிறுவர்கள்… இனி எப்போது வாய்க்கும் இனிய இந்த மாலை நேரபேருந்து பயணம்…நினைவுக்குள்நிழலாடும்அடங்காதஆசை இது…தூர தேசதமிழர்களின்விழி ஏங்கும்கனவு இது…
தாயே… என் வயிற்றுப் பசியை உன் உடலை விற்றுப் போக்கினாய்… நான் என்ன பாவம் செய்தேன்… தினம் தினம் பூக்கும் இரவுகளில் நான் சருகாய் உதிர்ந்து கொண்டிருக்கிறேன் மற்றவர்களின் உடல் பசிக்கு… யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் இது சான்றோன் மொழி… நீ பட்ட துன்பத்தை எனக்கல்லவா… பரிசளித்து விட்டாய்… காம மிருகங்களின் நகம் பட்ட காயங்கள் … நெருக்கி இம்சித்தவனின் பிடிக்காத முத்தங்கள்… மெல்லிய பெண்மையினை வாட்டிவதைத்த நிமிடங்கள்… என் வாழ்வை தொலைத்தவளே… இது தானா உன் ஆசை… நித்தமும் ஒரு காதல் கதை என் செவி வழியே வழுக்கிச் செல்லும்… அதை ஒரு நாளும் உணராவண்ணம் ஏன்
நீருக்குள் உலவுகின்றமீனை போல…உன் நினைவுக்குள்உலாவிக் கொண்டிருந்தேன்…இறுக தழுவியநிமிடங்கள்…பரிமாறிய முத்தங்கள்…தலை கோதியதருணங்கள்..இன்னும்சில பிற…என்நினைவு நரம்புகளைஅறுத்ததுஉன் வார்த்தைகள்“என்னை கைவிட மட்டாயே “சிரிப்பு தான்வருகிறது…ஒரு வருடம்முடியபோகிறது…நீ அவனைமணம் புரிந்து…
நீண்ட தூரம் நடந்தேன் மனதின் வலி போகவில்லை… ச்சீ…நீங்கள் எல்லாம் மனிதர்களா… பணமென்னும் நஞ்சை உண்ண மனித முகத்தோடு திரியும் விலங்குகளே… வழி நெடுக வரலாறுகள் ஆனாலும் புரியவில்லை காசிற்கு கொடுக்கும் அன்பை கொஞ்சம் மனிதருக்கும் கொடுத்தால் என்ன… காற்றில் பணம் பறக்க அருகில் ஒரு பணத்தாசை பிணம் மட்டும்…. அது அந்நாட்டு பணமில்லை… சீந்தி பார்க்க ஒருவர் இல்லை… பிணம் சொன்ன கதை இது தான்… பணம் மட்டும் வாழ்கை இல்லை…
ஒருமொட்டுமலர்ந்தது..என்மன இடுக்குகளில்உறைந்திருந்ததுன்ப சுமைகள்…சிதறி ஓடின… ஓங்கிவளர்ந்த மரம்எப்பொதும்யாரிடமும்எதுவும் கேட்டதில்லை…இலைகளைஉதிர்த்துஇயன்றவரைசொல்லி பார்க்கும்ஆனால்யாருக்கும் புரிவதில்லைஎன்ன அவசரமோ…கூடு இழந்தகுருவிகளின்கண்ணீர் கதைகளைஅதன்இலையுதிர் காலத்திலே… “நீரோடை”பார்த்ததும்துள்ளி குதித்தேன்…எத்தனைகவிதைகளைஅள்ளி இருப்பேன்…இங்கிருந்து…இந்த தடாகத்திலிருந்து… எங்கிருந்தோவந்ததென்றல் காற்றுவழி மறித்து…காதினில்ஏதோஉரைத்தது…அதன் மொழிபுரியவில்லைதமிழ் இல்லையே…அதனாலா… ஆனால்மயக்கத்தில் ஆழ்த்தியது… பூக்கள்,மரங்கள்,மலை முகடுகள்,நீரோடைகள்,இதமான தென்றல் காற்று,கணக்கில் வராஇன்னும்எத்தனையோஇயற்கை செல்வம்…எங்கும் தெறிக்கின்றன…இன்பமெனும்நினைவு விதைகளைபயிரிடத்தான்இங்குயாருக்கும்மனமும் இல்லைநேரமும் இல்லை…
நீண்ட இடைவெளி இந்த சந்திப்பு நமக்குத்தான்… உன்னை வெறுக்கிறேன்… ஏன் உன்னை பார்த்தேன்… அந்த சிரித்த முகம்….அய்யோ என்னை காப்பாற்றுங்களேன்… எங்கே போனது உன் கோபம்… பரிதாப பார்வை பார்த்தாய்… இந்த முறை மயங்கமாட்டேன்… உதட்டை சுழித்து, முலாம் பூசிய சிரிப்புடன் விடை பெற்றாய்… வெகு நேரம் பார்த்தேன்… உன் சோர்ந்த நடையினை… ஆனாலும் இந்த முறை மயங்கமாட்டேன்… தூரத்தில் போகும் போது கண்களை துடைத்தாயே அழுதாயா … ஆனாலும் இந்த முறை மயங்கமாட்டேன்… குலுங்கி அழுகின்றேன் தேற்ற ஆளில்லை… நான் செய்த தவறுக்கு நீ… ஏன் மன்னிப்பு கேட்கின்றாய்… நான் செய்த தவறுக்கு நீ… ஏன் துன்ப சிலுவைதனை
ஏ! மரக்கட்டைகளே எவ்வளவு நேரம் எரிவீர்கள்… மனிதர்களிடம் இல்லாத ஈரம் உங்களுக்கு எதற்கு… மனித வடிவில் விலங்கு ஒன்று படுகையிலே பல நாட்கள்… நாடி பிடித்து மருத்துவன் சொன்னான்… “கடவுள் தான் காக்கும்” என்று அவன் மனிதர்களாய் மதிக்காத உறவினர்கள் தலையாட்டினர்… வேறு என்ன செய்ய முடியம்… பெற்றுவிட்டார்களே!!! மண் ஆசை பொன் ஆசை பெண் ஆசை ஆணாய் இருந்துவிட்டால்… பெண்களை விட்டுவிட்டார்… ஆணாதிக்க நம் முன்னோர்… இன்று நான் கேட்பதும்… இன்று நான் பார்ப்பதும்… என் விருப்பம் இல்லை இது மட்டுமே இங்கு விற்பனைக்கு… விருப்போ…வெறுப்போ நுகர்வு கலாச்சாரம் இதில் மட்டும் மாய்மாலம் செய்துவிடும்… இன்று என் மேல் திணிக்கப்பட்டவை….
நீவருவாய் எனதெரியும்…நின்றேன்உன்பார்வைபடும் படி… அதுஒரு மழைக்காலம்கையில்கவிதைகள்…என்னோடுமழையில்அவைகளும் நனைந்தன… 12 C மயிலைபேருந்து…சன்னலோரம்நீ…படிக்கட்டு பயணம்…ஆதரவு தந்தாய்என்கவிதைகளுக்கு …உனக்குதெரியாது…அதுஅத்தனையும்உனக்காகஎழுதியவை என்று… ஒரு நாள்அத்தனைகவிதைகளும்சாலையோரம்…நீமட்டும்அதேபேருந்தில்…உன்னால்மறுக்கபட்டது….எனது கவிதைகள் கூட…
ஐயா…பிச்சை போடுங்க சாமி…என் நண்பன் பார்த்தான் கீழிருந்து மேலாக..மறுத்தான்ஈயென இறத்தல்…நான்முடிக்கவில்லைதமிழ் அறிந்தவன்…பணம் கிடைத்தது அந்தமுதியவருக்குசாலையோரத்தில் மகிளுந்தை விட்டுஇறங்கினான்…வாகன நிறுத்துமிட சீட்டை நீட்டினான்ஒரு சிறுவன்…நண்பனின் வாயில்அனல் தெறிக்கும் வார்த்தைகள் இனிய உளவாக…முடிக்கவில்லைநான் அம்பை திட்டுவதில் பயனென்னகோபத்தை விலக்கிக்கொண்டான் 2010த்திலும்வள்ளுவர் தெரு முழுதும்திரிகின்றார்… அவர் குறளாலே…குருஎன்பார்.. இங்கு அறத்தைவிற்பார்…அவர் நாணவள்ளுவம் வழி நிற்போம்…மனிதனாய்…உயர்ந்த மனிதனாய்…
என்ன தான் கும்பல்ல வாங்கினாலும்…நாம எழுதியதையும் கவிதைன்னு மதிச்சதுக்காக…மனசுல ஒரு சின்ன சந்தோசங்க… இந்த படதிற்கு நான் எழுதிய இரு கவிதைகள்… முதல் கவிதை பட்டம் அறுந்துபோனாலும்அது காதல் பட்டம்பால் நில ஒளியில்அதுசுமந்து செல்கிறது…உன்னோடு நான் இருந்தகடைசி சிலநிமிடங்களை… இரண்டாவது கவிதை கண்ணே!இங்கே பார்…நிலவுக்கு ஆதரவாய்செஞ்சுடர்… தலை சாய்த்துகொஞ்சி நிற்கும்மர நிழல்கள்…அதற்கு ஆதரவாய்மலை முகடு… என்நினைவலைகள்வானில்மேக மூட்டமாய்… நீமட்டும்இங்கு இல்லைஉன்சுவடுகள்எங்கும் எதிலும்…
நித்தம் ஒரு இடுகை நித்திரை கெடும் சில நாள்… பலர் படிப்பார் பலர் ரசிப்பார்… வோட்டுக்களை பார்த்தால் பலர் சிரிப்பார்… நல்லதொரு பயணம்… அங்கங்கே பொறுமை கொஞ்சம் சோதிக்கும்… நிலைத்துவிட்டால் தமிழ் எழுத்துன்னை நேசிக்கும்.. தமிழ் பெண்மை தன்மை வாய்ந்ததாம் கர்டுவேல் மதிப்பிட்டார்… இன்பத்தை மட்டும் ஊட்டும்… வீரியத்தை அல்ல என்றார்… புறநானூறு படித்தாரோ என்ற ஐயம் எனக்கு… நண்பர்களே… எனக்கு பொறுமை அதிகம் உங்கள் வரவுக்கு என் வந்தனங்கள்… சராசரி மனிதனாய்… இன.. மான…தமிழனாய்…
நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை… ஒரு உணர்வற்ற தலைவன் குடும்பத்தோடு ஆட்சி கட்டிலில் கும்மாளம் அடிப்பதை காண்பதற்கு…. நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை… தன் இனம் அழித்தவனை ஆரத்தழுவும் அருவருப்பை காண்பதற்கு…. நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை… அரசியல் என்றால் கண்ணில் ஆட்சி மட்டும் பளபளக்கும் தமிழ் அரசியல்வாதி குமுட்டைகளை காண்பதற்கு…. நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை… ஐயோ என் தமிழ் நாட்டில் நான் இல்லை… முத்துக்குமார் போன்று சிறு பொறியாய்… என் இனமே துரோகி கூட்டங்களால் தூள் தூளாகி போனயே! மரணத்தை வென்ற மாவீரர்கள் புகைபடங்களில் துரோக கூட்டங்கள் மனதை
நிறப்பிரிகை படித்திருப்பாய்…இயற்பியலில்உன் நிழல் பட்டுநிற சிதறல்களாய்ஒளிரும்என்னை பார்…எளிதில் உனக்குவிளங்கும் காதல் காயப்படுத்துமாம்எப்படிஅது உண்மையாகும்…என் காயங்கள்உன்னால்ஆற்றப்படும் போது… குளிர்ந்த காலை…இதமான பனி காற்றுஆனால்மூச்சு முட்டியதுஉன் நினைவுகளால்…
புதிய பதிவரின் தளத்தில் இருந்து… http://nanumullen.blogspot.com/2010/06/blog-post_07.html எனக்கு தெரியாது இன்றும் நினைத்தாலும் இனிக்கும்( கசக்கும் ) நினைவுகள் கண்ணிருடன் மழலையர் பள்ளியில் கால் வைத்தது வள்ளி டீச்சர் தேவாலயம் கூட்டி சென்றது மதிய சாப்பாடு மாம்பழ துண்டுகளுடன் ஏன் தாயின் கைகளால் சங்கீதா வகுப்பு தோழியின் சாக்லேட் பகிர்வு தாத்தா கடை சிகப்பு மிட்டாய் இந்த அடியை மறக்காதே என்ற வெங்கட் வலித்தாலும் சிரித்துகொண்ட அடுத்த நாளுக்காக காத்திருந்தது எழாவது ரேங்க் எடுத்தது வாசனை வந்த புதிய புத்தகம் நட்ராஜ் பென்சில் கொட்டும் மழையில் நனைத்து கொண்ட வீட்டுக்கு சென்றது.
அது தொலைத்தநிமிடங்கள்…. கொஞ்சம் நஞ்சம் அல்ல… கிரகண சந்திரன் போல்… மனதில் அது நிரப்பியகலக்க இருள்கொஞ்சம் நஞ்சம் அல்ல… மனதினை இறுக்கி…உணர்வுகளை காயப்படுத்தி… சே,வாள்ளஸ்நம்மவர்கள் ராசராசன், பூலித்தேவன்அனைவரையும் இதுஇப்படிதான்செய்திருக்குமோ…. நெருங்காதே நகர்ந்து செல்…ரணங்களை தாங்கி..நொடிகளில் சுவசிப்பவர்கள்…இல்லாத துயரங்களில்மனதை தைக்க…இருக்கும் நிமிடங்களைஇழக்க தயாரில்லை..
மனதை பாதித்த ஈழத்து கவிதை… http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html நேற்றைய அவளுடைய சாவு எனக்குவேதனையைத் தரவில்லைமரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்அதிர்ந்துப் போதல் எப்படி நிகழும்?அன்பான என் தமிழச்சிகளே,இத்தீவின் சமாதானத்திற்காய்நீங்கள் என்ன செய்தீர்கள்!?ஆகவே, வாருங்கள்உடைகளை கழற்றிஉங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்.என் அம்மாவே உன்னையும் தான்!சமாதானத்திற்காய் போரிடும்?புத்தரின் வழிவந்தவர்களுக்காய்உங்கள்யோனிகளைத் திறவுங்கள்…பாவம்,அவர்களின் வக்கீரங்களைஎங்கு கொட்டுதல் இயலும்?வீரர்களே வாருங்கள்உங்கள் வக்கிரங்களைத்தீர்த்துக் கொள்ளுங்கள்.என் பின்னால்என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.தீர்ந்ததா நின்று விடாதீர்!எங்கள் யோனிகளின் ஊடேநாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.ஆகவே,வெடி வைத்தே சிதறடியுங்கள்ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி,அள்ளிப் புதையுங்கள்.இனிமேல் எம்மினம்தளிர் விடமுடியாதபடி.சிங்களச் சகோதரிகளே!உங்கள் யோனிகளுக்கு இப்போது தேவையில்லை.
ஐபிஎல் ஊழலில் சிக்கி பதவியிழந்த தரூருக்குப் புதுப் பதவி – கவிதை பிறந்த காரணம் நெஞ்சு பொறுக்குதில்லை…தப்பு செய்தால்…அறியாமல்…மன்னிக்கலாம்…இவரோ தவறு செய்திருக்கிறார்…தெரிந்தே… இவர்கள் எப்போதுமே சரியாக…தண்டிக்கபடுவதிலை…இவர்கள் தண்டனையை அனுபவிப்பது… கழிப்பது…பொது சனங்களே. ஊழல் புகார்…பதவி இழப்பு…புது பதவி…கட்சியில் இருப்பதால் இவர்கள்… எல்லாம் கடந்தவர்கள்…ஆமாம்.. எல்லை இல்லா ஊழல்…எல்லை இல்லா பதவி…எல்லை இல்லா அதிகாரம்…எல்லை இல்லா பணம்…மக்களை நிறுத்திவிடுகின்றனர்…வறுமையின் எல்லையில்… பி.கு. மேலே உள்ள படம் இந்தியாவின் ஊழல் பற்றிய அகவரிசை(Index).
நில் என்றாள் செல் என்றாள் பேசு என்றாள் காதல் செய் என்றாள் முத்தம் கொடு என்றாள் கட்டியணை என்றாள் இப்போது என்ன என்றேன்… விட்டுவிடு என்கிறாள்…
குவிந்த அதரங்கள் மட்டுமே பேசும் வார்த்தைகள் புரிந்தவர்களுக்கு மட்டுமே விளக்கங்கள் கூட நடந்தால் இமயம் இளகியது… என்ன ஒரு வெப்பம்… நேற்று கேட்டோமே … கதைகளை பேசும் விழியருகே.. வானொலியில் ஆமாம் கண்கள் பேச ஆரம்பித்துவிட்டன… காதினை கூர் படுத்தினேன்… மெல்லிய ஓர் சத்தம்… என்ன இது விழி பேசவில்லையே… ஓ.. அதரங்கள் பேச ஆரம்பித்துவிட்டன. தாங்கமுடியாத தவிப்பு… நெருங்கி நிதானமிலந்தேன்… உயிர் உதறல் எடுத்தது… தள்ளினேன் அவளை… எங்கும் வெளிச்சம்… மணி ஆறு… எங்கோ தூரத்தில் கதைகளை பேசும் விழியருகே.. வானொலியில் உங்களுக்காக இங்கேயும்… Tamilmp3world.Com …
நீண்ட காலமாக பத்திரிகைகளில் வந்து போகும் செய்தி இது… என்ன காரணம்… ஒரு ஆண் ஏன் இப்படி செய்கிறான்… தான் காதலிப்பதாக சொல்லும் பெண்ணின் முகத்தில் அமிலம் ஊற்ற எப்படி மனசு வரும்… இதற்கு ஏதேனும் மறுபக்கம் இருக்குமா… இந்த நூற்றாண்டில் காதல் படும் பாடு இருக்கிறதே… ஒன்றும் சொல்வதற்கு இல்லை… பாவிகளே… காதலை நீங்கள் காயப்படுத்தி தயவிட்டு காதலித்தோம் என்று சொல்லாதீர்… பெண்களின் உள்ளத்தில… தேடவேண்டியதை வேறு எதிலோ தேடிவிட்டு… கிடைக்காத வன்மத்தில் அமிலத்தை வீசுகிரீரே… சிறுதுளி வெந்நீர் பட்டு துடிக்கும் மனித தேகம்… எதிரிக்கும் செய்ய அஞ்சும் இப் பாதக செயலை இங்கு எப்படி தான்
இரவெல்லாம் விழித்திருந்தேன்…இமைகள் இரண்டும் இணையவில்லை…இளங்காற்று இனிதாய்…இமையோரம் இம்சிக்க,,,இவள் ஒருத்தி தினந்தோறும்… என்இரவை தின்னுகின்றால்…இமை கலங்கி…இழந்த இரவுகள்…இன்று…பகல் பொழுதை மென்று தின்ன..இளகுமா உன் நெஞ்சம்…இம்சிக்க வந்தவளே…இரவினையும் பகலினையும்..இனி நான் தான் அறிவேனோ…இடம் மாறிப்போனதென்ன…இந்த நொடி என் நினைவலைகள்… இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும்சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்..
பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த படம்… இன்று ஒரு வாய்ப்பாக மீண்டும் பார்த்தேன்.. ஒரு கவிதை படித்த திருப்தி… உயிரை தின்றுகொண்டிருக்கும் நோயிக்கிடையில்… மோதி…வம்பிழுத்து..பரிதாபத்துடன்… ஆரம்பிக்கும் காதல்… திரையுலக மன்னாதிமன்னர்கள் இளையாராஜா…மணிரத்னம்..p .c.ஸ்ரீ ராம்…. அப்பப்பா… விளையாடிருக்கிறார்கள்… தனிமையிலே பார்த்தேன்….இனம் புரியாத உணர்வு… நினைவுக்குள் வினவு… லீனா…டோண்டு…ஜெயமோகன்…எல்லா விடயங்களும் கரைந்தது… உற்சாகமாய் இதோ எனது அடுத்த கவிதை…. நான் தொலைத்த பத்து ஆண்டுகள்… என் தமிழ் பசியை கூட்டுகிறது… தமிழ் பேசி…தமிழ் எழுதி…என் நண்பர்… பலர் உள்ளார் இந்த இணையத்திலே… நான் வேண்டும் ஒரு வரம்தனை தெய்வம் தான் தரவேணும்… தர்க்கத்தில் இடுபடும் அனைவருமே உணரும்வண்ணம்… வீழ்ந்த இனம் தலை நிமிர
வார்த்தைகளை அள்ளி தெளித்து… கவிதை ஒன்று வைத்துள்ளான்… நேசத்தை வீதியெங்கும் கவிதையாலே … வீசியுள்ளான்… மாற்றத்தை இன்று அவள்… விழியோரம் காண்கின்றான்… அதரங்கள் விரிய இங்கே… அவள் ஏதேதோ பேசுகின்றால்…. இமை மூடா நிலையினிலே… இனிப்பதனை நுகர்கின்றான்… மடித்திருந்த கவிதை மொட்டு.. தென்றலோடு உறவாட.. கொடுக்கத்தான்… உரமில்லை… பூத்ததிங்கே… வலைபூவில்…
நேற்று சொன்னார்கள்…எதிர்போம் என்று…இன்று சொன்னார்கள்…வரவேற்போம் என்று…நாளை என் சொல்வார்…. அம்பேத்கர் சிலை சிரிக்க… மாமன்னன் கருணாநிதியோ… தன் பெருமை கதையளக்க…பாவம் விழுந்த அடி மறப்பதற்குள்…புன்னகைப்பார்…வழக்கறிஞர்… கருணாநிதி மதம் கடந்து சாதி கடந்தவர்…ஆனால் ஒருஅரசியல்வாதி முட்டையால் அடிவாங்க… பொறுக்கமட்டார்… திருப்பி கொடுத்தார்… இங்கே நீதியரசர் ஓடுகின்றார் உயிர் பயத்தால்… இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…