சுந்தரம்… (முழுப்பகுதி)
சுந்தரத்தின் கையில் ஒரு நாவல்… வெகு நேரம் கீழே வைக்காமல் படித்துக்கொண்டிருந்தன்…கதை மாந்தர் அவன் மன உணர்ச்சிகளை மாறி மாறி ஆக்கிரமித்து கொண்டிருந்தனர். தொலைவில் அவன் அம்மா நூல் புடவையில் ஒட்டு தையல் போட்டு வறுமைக்கு விளம்பரம் செய்து கொண்டு இவனை நோக்கி வந்து கொண்டிருந்தால் காலம் தின்ற அவள் இளமை, வறுமை தின்ற அவள் பொறுமை காட்டு கத்தலாய் வெளிப்பட்டது அவன் நாவல் படித்துக் கொண்டிருப்பதை பார்த்து. அவன் எப்போதுமே கவனமாக தான் இருப்பான் அம்மாவுக்கு தெரியாமல் நாவல் படிப்பதில். இன்று தான் கோட்டைவிட்டுவிட்டான். அடுத்த அரைமணி நேரம் அவன் வாங்காத திட்டு இல்லை… “சுந்தரம், இந்த பணத்த