நெடுகர்கள் – க. பேரபாயம் – II
க. பேரபாயம் – II கிறுமுகர்கள் ஈனா தேசத்தின் வட பகுதியில் எல்லா இன மக்களையும் கொன்று குவித்து எல்லா இனங்களையும் அடிமை படுத்தி வாழ்ந்து வருபவர்கள். தேவதேவிகள் மட்டும் கிறுமுகர்களின் ஆதிக்கம் கண்டு பயப்படுவதில்லை, அவர்களின் ஆசா சக்தியை கண்டு கிறுமுகர்களே அஞ்சுவது ஒன்றும் புதிய விடயமல்ல, தேவதேவிகள் தீடீரென்று மறைந்து தாக்குவதில் வல்லவர்கள் அவர்களின் இந்த ஒரு சக்தியை மட்டும் தான் கிறுமுகர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. மும்முறை அகண்ட போர் நடத்தியும் இன்றுவரை தேவதேவிகளை அவர்களால் வெல்ல முடியவில்லை. தேவதேவிகளின் விசித்திர சித்திகளை எதிர் கொள்ள கிறுமுகர்கள் யாக்கினை பூசையை பல முறை தொடங்கினர் ஆனால்