வார்த்தை விபத்து
0 Comments
சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள் இருவரும், நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தது. அவன் அவள் கையை இறுக பிடித்தான். அவள் ஏதோ உணர்ந்ததுபோல் தலையை ஆட்டினால் மனது ஒருமித்தது, ஒரு கண நொடி தான், இரு உடல்களும் தூக்கி எறியப்பட்டது. இருவரின் சிதைந்த உடல்களும் உறவினர் மத்தியில் கிடத்தப்பட்டிருந்தது. நிலவனுக்கு பிரபாவை வெகு நாளாக தெரியும், அவர்கள் அலுவலகத்தில் அவளை போல் அமைதியான பெண் யாரும் இல்லை, அவளிடம் தன் இரண்டு வருட காதலை ஒரு வழியாக சொல்லிவிட்டான். இரண்டு வாரம் கழித்தே அவளிடம் இருந்து பதில் வந்தது. “மரணம் மட்டுமே ஒன்று சேர்க்கும்” துண்டு காகிதத்தில் அவள் பதில். “நான் ஒரு அமைச்சர், உன் கல்யாணத்தை