நாம் தமிழர், நாம் தமிழர்
என்று
பறை அடித்தும்
விழிக்காத தமிழனை
இன்னும் எத்தனை உயிர்களை
கொடுத்து எழுப்புவது!
நெகிழ்வோடு நகர்ந்த தருணங்கள் காந்த புலன்களாக நுழைவரியா காதல்கள்! வசந்தங்கள் வீசிப் போகும் மாலை நேரப் பொழுதுகள்! தமிழ்ப்பசி போக்கிய கடல்புறா நாவல்கள்! பூவாய் மலர்ந்த தமிழ்ப்பிள்ளைகள்! இதுவும் ஒரு வெற்றி தான்… நெடுவாசல்,கதிராமங்கலம், நீட்டை தாண்டி! தமிழா! நீ பூவாய் மலர்ந்தாய்…
படுகொலையை நிகழ்த்திவிட்டான் பௌத்தம் பேசும் படுபாதகன்! தமிழ், தமிழ் என்றான் திராவிட முகம் சுருங்க! பூகோள அரசியலாம் புதிர் போட்டான் காவி மைந்தன்! முப்பது மைலே தூரம், பல லட்சம் உயிர் பொசுங்க! தமிழா, தமிழீழம் நீ மறந்தாய்! தடுக்காத இனச்சாவு நித்தம் ஒரு போராட்டமாய் பாவத்தின் வடிவிலே தமிழ்நாட்டை சுற்றுதிங்கே!!!